ஹபராதுவை, பீல்லகொட பிரதேச விஹாரை ஒன்றில் வழிபாடு செய்யச் சென்ற உக்ரேனிய சுற்றுலா பயணியான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞரை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இந்த யுவதி விஹாரைக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் நேற்று முன்தினம் (21) வழக்கம்போல் விஹாரைக்குச் சென்று போதி மரத்தை வழிபட்டுள்ளார்.

அப்போது, குறித்த சந்தேக நபர் அங்கு வந்து புத்தர் சிலையை வழிபட வருமாறு யுவதியை அழைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞரின் அழைப்பின் பிரகாரம், புத்தரின் சிலையை வணங்கிவிட்டு வெளியே வந்தவுடன் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version