மன்னார் வளைகுடா கடற்கரையில் கடற்பசு ஒன்று இறந்த நிலையில் நேற்று (22) கரையொதுங்கியுள்ளது.
இராமநாதபுரம் – பாம்பனுக்கு அருகில் உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியிலுள்ள தோனித்துறை கடற்கரையில் இறந்த நிலையில் இந்த கடற்பசு கரையொதுங்கியுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக இராமேஸ்வரம் வனவள திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.
பரிசோதனையின் பின்னர் கடற்பசுவை கடற்கரை மணலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.