யாழ்ப்பாணம், நீர்வேலி தெற்கு பகுதியில் யுவதியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இளைஞனின் வீட்டை கிராம மக்கள் சுற்றிவளைத்து, இளைஞனை நையப்புடைத்தனர்.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரவர்கள் இணைந்து முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் இரவுஅவ்வாறு யுவதியின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர் என குற்றம் சாட்டி , அந்த இளைஞன் வீடுகளுக்குள் புகுந்து இளைஞன்மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இளைஞனின் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்தனர். இது தொடர்பில் 119 அவசர இலக்கம் மூலம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

இச் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மீதும் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இளைஞன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் வீட்டை சுற்றிவளைத்த மக்கள்

இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்தது. நீர்வேலி தெற்கு சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞன் ஒருவர் யுவதியொருவரை காதலித்துள்ளார். அவர்களிற்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து, யுவதியின் நிர்வாண புகைப்படத்தை இளைஞன் பேஸ்புக்கில் பதிவேற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது.

பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் பொலிசார் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version