இளைஞர் ஒருவர், தனது காதலி எனக் கூறப்படும் 22 வயதான யுவதியுடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அவரது காதலி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

இறக்குவானை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன், தனது காதலி என்று கூறப்படும் 22 வயதுடைய யுவதியுடன் முச்சக்கரவண்டியில் இறக்குவானை பனாவல பகுதிக்குச் சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை ஒன்றைப் பதிவு செய்து அங்கு தங்கியதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் குறித்த இளைஞன் தனது காதலியை அந்த அறையில் விட்டுவிட்டு மதிய உணவு கொண்டு வருவதற்காக வெளியே சென்றதாகவும் திரும்பி வந்து பார்த்தபோது தனது காதலி குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டதாகவும் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி குளியலறையில் தனது ஆடையின் ஒரு பகுதியைப் பயன்படுத்தியே தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த இளைஞர் விடுதி ஊழியர்களுக்கு அறிவித்ததையடுத்து, ஊழியர்களின் உதவியுடன் யுவதி காவத்தை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு யுவதியைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version