களுத்துறை, பின்வத்த பிரதேசத்தில் காதலனை கடத்தி சென்ற காதலியை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காதல் உறவில் இருந்து பின்வாங்கிய இளைஞனை கடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பாதுகாப்பு படையினருக்கு தொடர்புடைய யுவதி உட்பட குழுவினரை தேடி நேற்று இரவு விசாரணைகளை ஆரம்பித்ததாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் பின்வத்த பிரதேசத்தில் வசிக்கும் கடத்தப்பட்ட இளைஞனும் அவரது தாயும் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட இளைஞனும் கடத்திய யுவதியும் காதலித்து வந்ததாகவும், குறித்த இளைஞன் யுவதியை திருமணம் செய்து கொள்ள விரும்பாத காரணத்தினால் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்த பகுதியில் முச்சக்கரவண்டியில் பலருடன் வந்த யுவதி இளைஞனை கடத்திச் சென்று வெறிச்சோடிய வீடொன்றில் மறைத்து வைத்து மீண்டும் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் யுவதி மற்றும் அவருடன் வந்த நபர்களை கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version