இந்திய சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக விஜய் இருந்தாலும், அவரது குடும்பத்தினரை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மகள் திவ்யா சாஷாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பெரிய ஸ்டாராக உயர்ந்துள்ளவர் தளபதி விஜய். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், லியோ படத்தில் நடித்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்காக ஆயத்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வரும் நிலையில் விஜய் அவ்வப்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக விஜய் மகன் மற்றும் மகளை பொதுவெளியில் கண்டிருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.
இதனால் விஜய்யின் மகள் மற்றும் மகன் எப்படி இருக்கிறார்கள் என்றும் கூட பலரும் தெரியாது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் தளபதியின் மகளா என்று ஆச்சரியத்துடன் கேட்டு வரும் நிலையில், படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.