ஹொரண – அங்குருவாதொட்ட – ரத்மல்கொட வனப்பகுதியிலிருந்து இளம் தாய் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
24 வயதுடைய இளம் தாய் ஒருவரும் அவரின் 11 மாதங்களேயான குழந்தையுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி குறித்த இருவரையும் காணவில்லை என அவரின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.