யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தான் வீட்டில் இல்லாத வேளை , வீட்டில் இருந்த தனது நகைகள் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (19) முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , பெண்ணின் சகோதரனை சந்தேகத்தில் கைது செய்து , விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது , சகோதரியின் நகைகளை தான் களவாடியதை ஒப்புக்கொண்டதுடன் அதனை அடகு வைத்து , 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து அவரிடமிருந்து பணத்தினை பெற்றுக்கொண்ட பொலிஸார் , அடகு வைக்கப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version