இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இந்திய பிரதமர்நரேந்திரமோடி தமிழ்மக்களிற்கு கௌரவமான வாழ்வை உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருநாடுகளுக்கு இடையில் அதிகளவு தொடர்பினை ஏற்படுத்தக்கூடிய பல உட்கட்டமைப்பு திட்டங்களில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுக்கான அபிவிருத்தி உதவிதிட்டமொன்றையும் இந்திய பிரதமர் அறிவித்துள்ளார். இலங்கை மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்திய பிரதமர் விடுத்துள்ளார்.

சமத்துவம் நீதி மற்றும் சமாதானத்தை உறுதிசெய்வதற்காக இலங்கை புனர்நிர்மாணப்பணிகளை முன்னெடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

.

Share.
Leave A Reply

Exit mobile version