ஒரே மகனுக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட்டதாலும், அடுத்ததாக வேறு குழந்தைகள் இல்லாததாலும், அவர்கள் மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மனமடைந்த தம்பதி, குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், முகிலன்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதன் (40). எம்.இ., பி.எல் பட்டதாரியான இவர், பெங்களூரிலுள்ள ஒரு தனியார் ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

இவருக்கும் தக்கலை மணலி பகுதியைச் சேர்ந்த பயோ டெக்னாலஜி முடித்த சைலஜா (36) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு 7-வயதில் ஜீவா என்ற மகன் இருந்தார். பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வந்த முரளிதரன், மூன்று வருடங்களுக்கு முன்பு தக்கலையில் குடிபெயர்ந்தார்.

தக்கலை அருகே மணலி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறியுள்ளனர்.

முரளிதரன் ஐ.டி கம்பெனி வேலையை விட்டுவிட்டு, நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் தினமும் மாலை தன்னுடைய மகள் சைலஜா வீட்டிற்கு பால் கொண்டு செல்லும் அவர் தந்தை கோபால், வழக்கம்போல் சனிக்கிழமை மாலை வீட்டிற்குச் சென்றபோது பூட்டியிருந்ததால், சத்தம் போட்டு அழைத்துள்ளார்.

வெகு நேரமாகியும் கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவர், கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கு மருமகன் முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையிலும், மகள் சைலஜா மற்றொரு அறையில் தூக்கிட்ட நிலையிலும், பேரன் ஜீவா முகத்தில் பாலித்தீன் கவர்கள் சுற்றிக் கட்டப்பட்ட நிலையில் கட்டிலிலும் பிணமாகக் கிடந்துள்ளனர்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தக்கலை போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

டி.எஸ்.பி உதயசூரியன் தலைமையில் போலீஸார் அங்கு சென்று மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் தெரியவந்துள்ளன. முரளிதரனுக்கும், சைலஜாவுக்கும் திருமணமாகி ஆறு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

அதன் பிறகு பிறந்த மகனுக்கு ஜீவா என பெயரிட்டு வளர்த்துளனர். ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை ஜீவா, பின்னர் மெல்ல மெல்ல ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மகனின் நோய்க்கு மருத்துவம் செய்து வந்துள்ளனர்.

கொரோனா காலக்கட்டத்தில் ஐ.டி துறையில் வேலை இழந்த முரளிதரன், தன் மனைவியின் சொந்த ஊரான தக்கலைக்கு குடிபெயர்ந்துள்ளார்.

பின்னர் தனது பி.எல் படிப்பை வைத்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறியுள்ளனர். ஒரே மகனுக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட்டதாலும், அடுத்ததாக வேறு குழந்தைகள் இல்லாததாலும், அவர்கள் மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மனமடைந்த தம்பதி, குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்துள்ளனர்.

உயிரை மாய்த்துக்கொண்ட முரளிதரன், சைலஜா மற்றும் குழந்தை ஜீவா

சிறுவன் ஜீவாவுக்கு நோய்க்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அதிக அளவில் கொடுத்துள்ளனர்.

அதனால் மயக்கமடைந்த ஜீவாவின் முகத்தை பாலித்தீன் கவரால் கட்டி கட்டிலில் போட்டுள்ளனர். இதில் சிறுவன் ஜீவா மூச்சுத்திணறி இறந்துள்ளான்.

அதன் பிறகு முரளிதரன் வீட்டின் ஹாலில் உள்ள மின் விசிறியிலும், சைலஜா அறையிலுள்ள மின் விசிறியிலும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டதால், மனமுடைந்து குடும்பத்தினர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version