மின்கட்டணத்தை செலுத்தாததால் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளின் மின்சாரவிநியோகத்தை துண்டிக்கநேரிடலாம் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.

கொழும்பு தேசியவைத்தியசாலை மன்னார்மாவட்ட பொதுவைத்தியசாலை பேராதனை போதனாவைத்தியசாலை கொழும்பு கிழக்கு முல்லேரியாவ வைத்தியசாலை தொற்றுநோய் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

மின்கட்டணங்களை செலுத்தாதமைக்காகவே இந்த எச்சரிக்கையை இலங்கை மின்சாரசபை விடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.

பேராதனை வைத்தியசாலை 70 மில்லியனையும் மன்னார்வைத்தியசாலை 14 மில்லியனையும் செலுத்தவேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார அமைச்சும் மாகாணசபைகளும் முழுமையான தொகைகளை இன்னமும் தங்களிற்கு வழங்கவில்லை என சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version