மட்டக்களப்பு தாந்தமலை முருகன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற இளைஞன் ஒருவர் குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பம் புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி எருவில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மோகனசிங்கம் பிரகதீசன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது,

தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில், சம்பவதினமான புதன்கிழமை களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேச மக்கள் திருவிழாவையிட்டு ஆலய வழிபாட்டுக்கு சென்றனர்.

இதன்போது, ஆலய வழிபாட்டுக்குச் சென்ற குறித்த இளைஞனும் அவரது நண்பர்களுமாக தாந்தாமலை குளத்தில் நீராடிய போது குறித்த இளைஞன் நீரில் முழ்கினார்.

இதனையடுத்து, அவரை நண்பர்கள் காப்பாற்றி மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் கொண்டுசென்ற நிலையில் இடைநடுவே வீதியில் உயிரிழந்துள்ளார்.

இதில், உயிரிழந்தவரின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச் சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version