சென்னையில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த தமன்னாவின் புகைப்படங்கள்

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இந்த விழாவிற்கு வந்திருந்த நாயகி தமன்னாவின் புகைப்படங்கள் இணையைத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா தற்போது பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். இதில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது சில படங்களை கைவசம் வைத்துள்ள தமன்னா ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ஜெயிலர் படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான 3 பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தமன்னாவின் நடனத்தில் வெளியான காவாலா பாடல் பலருக்கு வைப்பாக மாறியது.

அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், காவாலா பாடலுக்கு நடனமாடிய தமன்னாவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேபோல் சமுகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தமன்னா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சிகப்பு நிற உடையில் வந்திருந்த தமன்னா இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version