தலவாக்கலை கிறேட்வெஸ்டன் வனப்பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்கிழமை (01) மாலை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய தலவாக்கலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கிறேட்வெஸ்டன் மலை பகுதிக்கு சென்றனர்.
கிறேட்வெஸ்டன் மலை உச்சிக்கு ஏறிச் செல்லும் வழியில் வனப்பகுதியின் நடுப்பகுதியில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
கிறேட்வெஸ்டன் மலைத்தொடருக்கு ஏறுவதற்காக வருடத்தில் அதிகமான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது .