யாழ்ப்பாணம் – கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்துக்கு அருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (01) இரவு மீட்கப்பட்டுள்ளது.

ஆலய வீதியில் உள்ள சன சமூக நிலையத்துக்கு அருகில் உள்ள அறையில் குறித்த வயோதிபர் தனிமையில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், அவரது வழமையான நடமாட்டம் இல்லாத காரணத்தால் அங்கிருந்த சிலர், வயோதிபர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

அதன் பின்னர், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சடலம் காணப்பட்ட அறைக்குச் சென்ற பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version