தமிழகம்- மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப்பெண் ஒருவரைக் காணவில்லையென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மண்டபம் ஏதிலிகள் முகாமில் தங்கியிருந்த குறித்த பெணை கடந்த ஜூலை 27ஆம் திகதி முதல் காணவில்லையென முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் மண்டபம் பொலிஸ் நிலையத்தில் அவரது கணவர் முறைப்பாடு செய்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version