ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10 திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் ரூ.25 கோடியும் உலக அளவில் ரூ.90 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version