தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு.

இன்று (13) முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்தில் யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்டுவில் வீதி சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version