உக்ரைனின் சேர்னிஹிவ் நகரின் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஆறுவயது பிள்ளை உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – 120 காயமடைந்துள்ளனர்.
சேர்னிஹிவ் நகரை இலக்குவைத்து ரஸ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
நகரின் மத்தியில் காணப்பட்ட தியெட்டர் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி இந்த தாக்குதலை கண்டித்துள்ளார்- சமூக ஊடங்களில் அவர் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில்நகரத்தின் மையப்பகுதியில் சேதமடைந்த கார்களை காணமுடிகின்றது.
எங்கள் சேர்னிஹிவ்வின் மையப்பகுதியை ரஸ்யாவின் ஏவுகணையொன்று தாக்கியது சாதாரணமான சனிக்கிழமையை ரஸ்யா துயரம் மிகுந்ததாக இழப்புகள் மிகுந்ததாக மாற்றியுள்ளது காயமமைடந்தவர்களும் உயிரிழந்தவர்களும் உள்ளனர் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.