கனடாவின் மேற்கு எல்லையிலுள்ள பிராந்தியம் பிரிட்டிஷ் கொலம்பியா. இது பெரும்பாலும் பெரிய, நீளமான நதிகள் மற்றும் அதிகளவில் பெரிய மரங்கள் உள்ள நீண்ட மற்றும் பரந்த மலைத்தொடரை உள்ளடக்கிய பகுதி ஆகும்.
இங்கு திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றி, மளமளவென பரவ தொடங்கியது. இதை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். திடீர் தீ விபத்து காரணமாக இந்த பிராந்தியம் முழுக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அங்கு வசிக்கும் 20 ஆயிரம் பேரில் 19 ஆயிரம் பேர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். எஞ்சியுள்ளவர்களில் உதவிக்குழுவை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் வெளியேற சொல்லி சுற்றுச்சூழல் அமைச்சரான ஷேன் தாம்ப்சன் உத்தரவிட்டுள்ளார்.
கனடா நாட்டில் மட்டுமே ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. கணிக்க முடியாத வகையில் மாறி வரும் பருவநிலை, அதிக வெப்பம், இதைத் தொடர்ந்து காட்டுத்தீ மேலும் பரவலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. வான்வழி தீயணைப்பு படை தவிர பிற விமானங்களுக்கு, கெலோனா சர்வதேச விமான நிலையத்தை சுற்றி உள்ள வான்பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.