வரட்சி காரணமாக ஒரு இலட்சம் ஏக்கர் நெற்செய்கைகள் அழிவடைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் சந்தையில் அரிசியின் விலை ஓரளவுக்கு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்த போதும் விவசாயிகள் சபைக்கு நெல்லை விற்பனை செய்யாததால் அரசாங்கத்திடம் மேலதிக அரிசி அல்லது நெல் இருப்பு இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது நெல் இருப்பு தனியார் வசம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தனியார் வசம் உள்ள நெல் இருப்பு காரணமாக அரிசியின் விலை உயரும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுத்து நுகர்வோரை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் அறுவடை செய்யப்பட்ட பல வயல்களில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாகவும் விவசாய திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version