இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொல்பொருள் திணைக்களம், வனவளத்துறை, இராணுவம் மற்றும் பௌத்த மதகுருமார்களைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு பகுதிகளில் அமைதியற்ற சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரத்தை கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மறைமுகமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன் உள்ளிட்ட சைவ மத தலைவர்கள் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பௌத்த பிக்குகள் தொடர்ச்சியாக மதகட்டளைகளை மீறிய போதிலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைள் எடுக்கப்படவில்லை.

ஆனால், தழிழர்களின் சைவ நிகழ்வுகளை கட்டுபடுத்தும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கும் செயற்பாடுகள் நீதித்துறை அதிகாரத்தை இழிவுப்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version