நெல்லியடி கொடிகாமம் வீதியில், கோயில் சந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை 1:20 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மரண வீடு ஒன்றிற்கு சென்று விட்டு கொடிகாமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் மரணமடைந்துள்ளனர்.

இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக வசிக்கும் 31 வயதுடைய செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார்,

கரவெட்டி வதிரியைச் சேர்ந்த 29 வயதுடைய விஜயகாந்த் நிசாந்தன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலங்கள் பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version