கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை (21) மரணமடைந்துள்ளார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபல
தமிழ் ஆசிரியருமான ஜீவரஙஞ்சினி ( ஜீவா ரீச்சர்)

கிளிநொச்சியிலிருந்து கணவருடன் உந்துருளியில் வட்டக்கச்சி நோக்கி
பயணிப்பதற்காக கிளிநொச்சி நகர் ஏ9 வீதியில் காக்கா கடைச் சந்தியில்
வட்டக்கச்சிக்கு திரும்பும் போதும் எதிர்பக்கம் வந்த காருடன் மோதியதில்
படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த அவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version