ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கைது செய்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இராஜகிரிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ருமேனியாவில் தொழில் வழங்குவதற்காக 83 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், அவர் வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை எனவும் பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக சந்தேகநபருக்கு எதிராக பணியகத்திற்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ள தாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா 5 இலட்சம் ரூபா மற்றும் 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விசாரணை மார்ச் 11, 2024 அன்று நடைபெற உள்ளது.

வெளிநாட்டு வேலைகளைப் பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் இணையதளமான www.slbfe.lk ஐப் பார்வையிடுமாறும் , வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சரியான உரிமம் ஏஜென்சிக்கு உள்ளதா மற்றும் அதற்கான வேலை உத்தரவை நிறுவனம் பெற்றுள்ளதா என்பதைக் கண்டறிவதோடு அது ஒரு செல்லுபடியாகும் வேலைவாய்ப்பு நிறுவனமாக இருந்தாலும் கூட, 1989 ஹாட்லைனை அழைப்பதன் மூலம்மேலதிக தகவல்களைப் பெறுமாறும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொள்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version