உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இருந்து பழங்கால கலைப்பொருட்கள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பழங்கால நகைகள், வைரக்கற்கள், கண்ணாடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அவ்வப்போது இங்கு கண்காட்சிகள் நடத்தப்படுவது உண்டு. ஆனால், சமீப காலமாக அங்கு கண்காட்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், விலைமதிப்பற்ற பொருட்கள் பல திருடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ரோமானிய பொருட்கள் உட்பட சுமார் 2000 பொருட்கள் மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்களில் சில eBay-இல் அவற்றின் மதிப்பை விட மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டுள்ளமையும் தெரியவுந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையில் அருங்காட்சியகத்தின் மூத்த கண்காணிப்பாளர் பீட்டர் ஹிக்ஸ் என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், திருடப்பட்ட பொருட்களை மீட்டெடுக்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.