ஸ்பெயினின் கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வீராங்கனையொருவரை உதட்டில் முத்தமிட்டமை தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில் பல வீராங்கனைகள் எதிர்காலத்தில் போட்டிகளை புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துள்ளனர்.

ஸ்பெய் கால்பந்தாட்ட சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் ஜெனி ஹேர்மசோ என்ற வீராங்கனையை முத்தமிட்டதே பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அவரை பதவிநீக்கும்வரை தாங்கள் ஸ்பெயின் அணிக்காக விளையாடப்போவதில்லை என 81 வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

உலககிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வெற்றியை தொடர்ந்தே ரூபியாலெஸ் அந்த வீராங்கனையை முத்திமிட்டுள்ளார்.

ஸ்பெயின் அவரை நீக்குவதற்கான சட்டநடவடிக்கைகளை எடுத்துள்ள அதேவேளை பீபா அமைப்பும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எனினும் ரூபியாலெஸ் பதவி விலக மறுத்துள்ளார்.

ஜெனியிடம் தான் முத்தமிடவா என கேட்டதாகவும் அதற்கு அவர் இணங்கியதாகவும் ரூபீயாலெஸ் தெரிவித்துள்ளார்.

அது ஒரு தன்னிச்சையான முத்தம் பரஸ்பர மகிழ்ச்சி மற்றும் ஒருமித்தகருத்தின் வெளிப்பாடே என தெரிவித்துள்ள ரூபீயாலெஸ் இதுவே முக்கியம் அது சம்மதத்துடனான முத்தம் அதுவே எனக்கு போதும் என தெரிவித்துள்ளார்.

எனினும் அதனை அந்த வீராங்கனை நிராகரித்துள்ளார்.

அவர் சொல்வது திட்டவட்டமாக தவறானது மேலும் அவர் உருவாக்கிய சூழ்நிலையை தனக்கான பயன்படுத்தும் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வேலை சமூக சூழ்நிலைகள் எவற்றிலும் எவரும் விருப்பமற்ற நடத்தைக்கு பலியாகக்கூடாது என நான் கருதுவதால் நான் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கின்றேன் என தெரிவித்துள்ள அந்த வீராங்கனை நான் பாதிக்கப்படக்கூடியவளாக உணர்ந்தேன் எனது சம்மதம் இல்லாமல் மனக்கிளர்ச்சியால் தூண்டப்பட்ட பாலியல்ரீதியிலான செயலுக்கு பலியாகிவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னை மதிக்கவில்லை எனவும் அந்த வீராங்கனை குறிப்பிட்டுள்ளார்.

ரூபியாலெசின் நடத்தையை நியாயப்படுத்தவேண்டும் என கடும் அழுத்தங்களுக்கு உள்ளானேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறான நடத்தையை ஏற்றுக்கொள்ளமுடியாது நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என ஜெனிக்கு ஆதரவாக இறுதிப்போட்டியில் தோற்ற இங்கிலாந்து மகளிர் அணியினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version