யாழ்.மாவட்ட மக்களின் அன்றாட பாவனைக்காக கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆரம்பிக்கவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 60,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300,000 பேர் பயனடைவார்கள் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்திற்கான குழாய் இணைப்புகள் தொடர்பான டெண்டர்களை அழைப்பதற்கான அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் கோரப்படவுள்ளது.