நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, ரஜினி, விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

தொடர்ந்து குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா சமூக வலைதளத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இவர்களின் மகிழ்ச்சிகரமான தருணங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டுமே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில், நயன்தாரா தற்போது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகள் உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version