காலி கொக்கல பகுதியில் கடலில் நீராடச் சென்ற மூன்று பேரில் இரண்டு பேர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மற்றொருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில், காணாமல் போனவர் எம்பிலிபிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்பிலிபிட்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா பணியாளர்கள் நேற்றைய தினம் கொக்கல பகுதிக்கு சுற்றுலாச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காணமால் போயுள்ளவர் குறித்த பாடசாலையின் கல்விசாரா பணியாளர் என தெரிவிக்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version