ஆராச்சிக்கட்டு, குருக்குளிய பிரதேச பாடசாலைக்கு அருகில் இன்று (31) காலை ஆறு காட்டு யானைகள் கூட்டமாக வந்ததன் காரணமாக குருக்குளிய மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களை கிராமவாசிகளும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்ததாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார் .மேலும்
மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஆசிரியர் மேலும் தெரிவித்தார்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அப்பகுதி மக்களின் உதவியுடன் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version