சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் தெரிவித்த நடிகை விஜயலட்சுமி 7 பேரை ஏமாற்றியவர்;

ஆனாலும் சீமான் பரிதாபப்பட்டு ரூ3.5 லட்சம் கொடுக்க சொன்னார் என அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் தெரிவித்த நடிகை விஜயலட்சுமி 7 பேரை ஏமாற்றியவர்; ஆனாலும் சீமான் பரிதாபப்பட்டு ரூ3.5 லட்சம் கொடுக்க சொன்னார் என அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நடிகை விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில் சீமான் இன்று 2-வது முறையாக போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சாட்டை துரைமுருகன் கூறியதாவது: எனக்கு ரெண்ட் கொடுங்க.. பணம் கொடுங்கன்னு போன மாதம் வரைக்கும் அண்ணன் சீமான்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கு..

சீமான் ஏன் பணம் போட்டாருன்னு விஜயலட்சுமி கேட்கிறாங்க இல்ல.. தொடர்ச்சியாக பேசுறாங்க.. (ஆடியோ பதிவை காட்டுகிறார்).. தொடர்ச்சியா பேசி பணம் கேட்கிறாங்க..

பணம் கொடுக்க சொன்னாரு சீமான்: ஒரு பொண்ணு நம்ம மேல புகார் கொடுத்தாலும் பரவா இல்லை.. நம்மளை அசிங்கப்படுத்தினாலும் பரவா இல்லை.. ஒரு பரிதாபப்பட்ட பெண் இறந்து போயிருக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஏதாவது ஒன்னு செஞ்சு விடுங்கப்பான்னு சொல்லி… செல்வம், அண்ணன் சீமானிடம் 2010 காலத்தில் ஓட்டுநராக இருந்தவர். அவர் மூலமாக செய்ய சொல்லி இருக்கிறாங்க..

திமுக ரசிக்கிறது: ஒரு ரூ3.5 லட்சம் பணம் போட்டிருக்காங்க.. அந்த பணத்தைப் போடுறதுக்கு ஒவ்வொரு மாதமும் ஆடியோ.

இந்த புகாரின் பின்னணியில் திராவிட இயக்கத்தினர் இருக்காங்க.. திமுகவிடம் நல்ல பேர் வாங்குவதற்காக இதை செய்யுறாங்க.. திமுகவும் இதை ரசித்துக் கொண்டு அனுபவிக்கிறது.

திமுகவுக்கு தொந்தரவு: லோக்சபா தேர்தல் இன்றைக்கு வைத்தாலும் சீமான் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இலட்சக்கணக்கான ஓட்டுகளை பெறுவார்.. குறைந்தபட்சம் 1 கோடி ஓட்டுகளை தாண்டுவது இலக்குன்னு நாம் தமிழர் கட்சி நிற்கிறது.

நாம் தமிழர் கட்சி வாங்குகிற வாக்கு என்பது திமுகவைத்தான் டிஸ்டர்ப் பண்ணும். திமுகவின் 5% வாக்கு சரியும்: குறைந்தபட்சம் 5% வாக்குகள், திமுக பெறக் கூடியதை நாம் தமிழர் சரிக்கும்.

அப்ப அதை பண்ணக் கூடாது.. பெண்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு பெரிய இமேஜ் உருவாகி இருக்கு.

குறிப்பாக கல்லூரி பெண்கள், இல்லத்தரசிகளுக்கு பெரிய நம்பிக்கை உருவாகி இருக்கு. சீமான், தொடர்ச்சியாக தரக் கூடிய இடஒதுக்கீடு பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்தப் பெண்கள் மத்தியில் சீமான் நற்பெயரை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த புகார் பயன்படும். ஆனால் வழக்காகவோ நீதிமன்றத்திலோ ஒரு நொடியில் இந்த வழக்கை அடிச்சு கொன்டுவந்துருவாங்க..

12 வருஷத்தில் எத்தனை பேருடன் பழகினாங்க?: ஏன்னா... ஒரு பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ, பலாத்காரம் செய்யப்பட்டாலோ ஓராண்டுக்குள் புகார் கொடுக்கனும். அப்படியே நடந்திருந்தாலும் 12 வருஷம் கழிச்சு மருத்துவ பரிசோதனைன்னு சொல்றீங்க..

அவங்க எத்தனை பேரு கூட பழகி இருப்பாங்க.. யார் அவங்களை இது பண்ணினாங்கன்னு கேள்வி இருக்கு இல்ல இது முழுக்க முழுக்க அவதூறுக்கான புகார் மட்டும்தான். இவ்வாறு சாட்டை துரைமுருகன் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version