கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 91ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான 5000 மீற்றர் வேக நடை நிகழ்ச்சியில் சுழிபுரம் விக்டோரியா மாணவி ஜீ. தமிழரசி தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமை (17) காலை நடைபெற்ற இப் போட்டியை 34 நிமிடம் 40.03 செக்கன்களில் நிறைவு செய்தே தமிழரசி தங்கப்  பதக்கத்தை சுவீகரித்தார்.

இரண்டாம் இடத்தைப் பெற்ற கல்நேவ மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இமாஷி லியனகேயைவிட 2 நிமிடங்கள் 13 செக்கன்கள் வித்தியாசத்தில் தமிழரசி வெற்றிபெற்றிருந்தார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதலில் பாலச்சந்திரன் ரஜித்தா தங்கப் பதக்கம் வென்ற பின்னர் அகில இலங்கை பாடசாலைகள் மட்டத்தில் விக்டோரியா கல்லூரிக்கு தமிழரசி வென்று கொடுத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

இதேவேளை இப் பாடசாலையைச் சேர்ந்த எஸ். கணாதீபன் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.40 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கோலூன்றிப் பாய்தலில் விக்டோரியா கல்லூரி மாணவி ஆர். தனுஷாலினி 2.30 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version