பெண்களை பொருத்தவரையில் தங்களுடைய தலைமுடியை நேர்த்தியாக வைத்துக்கொள்வதில் கூடிய கவனம் செலுத்துவர்.
இன்னும் ,சிலர், சில கலர்களை பூசிக்கொள்வர் கட்டையாக வெட்டிக்கொள்வர். தலைமுடி வளர்வதற்கும், வெடிக்காமல் இருப்பதற்கும் பல ஷெம்போ, எயார் கிளினர்களை வாங்கி பயன்படுத்தவர்.
ஆண்களை பொருத்தவரையில் பலர், தலைமுடி பற்றிய கவலையே இல்லாமல் இருப்பவர்.
எனினும்,தனது தலைமுடியை நீட்டமாக வளர்த்து சிறுவன் ஒருவன் உலக சாதனை படைத்துள்ளான்.
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிடக்தீப் சிங் சாஹல் என்ற சிறுவன் தலைமுடி வளர்த்து உலக சாதனை படைத்துள்ளான்.
சிடக்தீப் சிங் சாஹல்க்கு சிறு வயது முதலே நீண்ட தலைமுடி இருந்துள்ளது இதனால், கவலையடைந்த சாஹல்இ தனது பெற்றோரிடம் அவற்றை நீக்கி விடும்படி கேட்டிருக்கிறார்.
ஆனால் வளர்ந்ததும், அதன்மீது தனி கவனம் செலுத்த தொடங்கியதுடன், தலைமுடி தன்னில் ஒரு பகுதி என்ற உணர்வும் ஏற்பட்டுள்ளது.
சாஹலின் தலைமுடி தற்போது 146 சென்டி மீட்டர் (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.
இந்நிலையில்இ சாஹலின் நீண்ட தலைமுடியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.
இதுபற்றிய வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சாஹல் தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றி பேசியுள்ளார்.