பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள சொஹ்சராய் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முக்கிய சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. 2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர்.
பட்டப்பகலில் போலீஸ்காரர்கள் முக்கிய சாலையில் சண்டை போட்டுக் கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், சிலர் இந்த சண்டையை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சாலையில் சண்டை போட்ட 2 போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
बिहार में शराब बंद है pic.twitter.com/If3tEpUIpU
— Piyush Rai (@Benarasiyaa) September 18, 2023