பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார்.

இவரது மகள் மீரா. இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version