• 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

• சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

 

இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது.

இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தினார்.

அந்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த வெங்காயம் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த பயனர்கள் சிலர், இவ்வளவு பெரிய வெங்காயத்தை எப்படி வளர்க்க முடிந்தது? என கேட்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version