செப்டெம்பர் முதல் 20 நாட்களில் 75,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 75,222 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

செப்டெம்பர் மாதத்திலும் 19,767 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 5,336 நபர்களும், ஜேர்மனியிலிருந்து 5,199 பேரும், ரஷ்யாவிலிருந்து 4,835 பேரும், சீனாவிலிருந்து 4,338 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 4,064 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மொத்தம் 136,405 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 979,540 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version