விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணி இன்று இடம்பெற்றது.

 

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று திங்கட்கிழமை (25) மாலை 2.30 மணியளவில் அகழ்வு பணி ஆரம்பமாகி நடைபெற்றது.

 

பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணி நடைபெற்றது.

 

 

 

 

 

 

குறித்த முதலாம் நாள் அகழ்வுப் பணிகளின்போது சில தகரங்கள் மாத்திரம் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்துடன், முதலாம் நாள் அகழ்வுப்பணிகள் நிறைவுக்குவந்திருந்தன.

அதேவேளை தொடர்ந்து இரண்டாம் நாள் அகழ்வுப்பணிகள் செப்ரெம்பர் (26) நாளை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Share.
Leave A Reply

Exit mobile version