“சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ்லைன் இந்தி ராநகர் பகுதியைச் சேர்ந்த வர் பாஸ்கரன் மகன் வைர முத்து (வயது 25).

ராஜபா ளையத்தை தலைமையிட மாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

ஆண்டிராய்டு போனில் அதிக நேரத்தை செலவிட்ட வைரமுத்து முகநூல் கணக்கும் வைத்திருந்தார்.

அதில் ஏராளமான நண்பர்களையும் கொண்டிருந்தார். இதற்கிடையே ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைரமுத்துவுடன் நண்பராக தன்னை இணைத்துக்கொண்டார்.

நட்பை கடந்த உறவு அவர்களிடையே நீடித்தது. அதுவே காலப்போக்கில் காதலாக மாறியது.

இருவரும் தங்களது காதலை பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டனர். எப்படியும் தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.

இதற்கிடையே வைரமுத்துவின் பெற்றோர், தங்களது மகன் திருமண வயத்தை எட்டிவிட்டதால் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர்.

இதுபற்றி மகனிடமும் தெரிவித்த அவர்கள் அழகான பெண்ணை தேடித்தேடி கடைசியில் ஒருவரை முடிவு செய்தனர்.

விரைவில் நிச்சயதார்த்தம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.

அப்போதுதான் வைரமுத்து தனது தந்தையிடம், தான் ஈரோட்டை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாகவும், அவரையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு தலையில் இடிவிழுந்தது போல் உணர்ந்த வைரமுத்துவின் தந்தை பாஸ்கரன், அது ஒருபோதும் நடக்காது.

உனக்காக நாங்கள் ஒரு பெண்ணை பார்த்துவிட்டோம். நிச்சயதார்த்தம் நடத்தப்பட உள்ளது, அவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இளம் பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி அவர் காதலனிடம் கூறி புலம்பியுள்ளார்.

இதையடுத்து மனவிரக்தியில் இருந்த வைரமுத்து பணியிலும் நாட்டமின்றி காணப்பட்டார். தனது காதல் ஈடேறாது என்று எண்ணிய வைரமுத்து தற்கொலை முடிவுக்கு வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் தனி அறையில் தூங்க சென்றார்.

நள்ளிரவில் திடீரென்று எழுந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மகன் எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட வைரமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.”,

Share.
Leave A Reply

Exit mobile version