யாழ் – பருத்தித்துறை சிறுப்பிட்டிப் பகுதியில் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் வாளால் வெட்டியுள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான லக்சன் என்பவர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் நாயன்மார்கட்டையைச் சேர்ந்த குறித்த நபர் சிறுப்பிட்டியில் திருமணம் செய்து வசித்து வருகின்றார்.

தாக்குதலில் இருந்து தப்பியோடிய நபர் சிறுப்பிட்டி வைரவர் கோயிலுக்குள் புகுந்த போதும் அங்கு வைத்தும் அவரை வாளால் வெட்டி விட்டு வன்முறைக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

மேலும் காயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version