உக்­ரேனில் நடை­பெற்­று­வரும் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்­திடும் வாய்ப்பு உள்­ளது என மக்­களை நேசிக்கும் அனைத்துத் தரப்­பு­களும் தொடர்ச்­சி­யாக எச்­ச­ரிக்கை விடுத்த வண்­ண­மேயே உள்­ளன.

அது மாத்­தி­ர­மன்றி, இந்தப் போர் அணு­வா­யுத யுத்­த­மாக உரு­வெ­டுத்து மனித குல அழி­வுக்குக் கூடக் கார­ண­மா­கலாம் என்­கின்ற எதிர்வு கூறல்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஆனால், போரை ஊக்­கு­விக்கும் மேற்­கு­லக நாடுகள் இந்த எச்­ச­ரிக்­கை­க­ளையோ எதிர்­வு­கூ­றல்­க­ளையோ கவ­னத்தில் கொள்ளத் தயா­ராக இல்லை.

மாறாக, மேலும் மேலும் போரை உக்­கி­ர­மாக நடத்­து­வ­தற்குத் தேவை­யான படைத் தள­பா­டங்­க­ளையும் பொருண்­மிய உத­வி­க­ளையும் உக்­ரே­னுக்கு வாரி வழங்கிக் கொண்­டி­ருக்­கின்­றன.

மறு­புறம், ரஷ்யா மீதும் அதன் நட்பு நாடுகள் மீதும் பொரு­ளா­தாரத் தடை நட­வ­டிக்­கை­களை மென்­மேலும் அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றன.

உக்­ரேனில் பத­வியில் உள்ள அர­சாங்­கத்தைக் காப்­பதன் ஊடாக உக்ரேன் மக்­களைப் பாது­காக்க முடியும், ரஷ்யா என்­கின்ற ‘கொ­டு­மை­யான அரக்­க­னிடம்’ இருந்து உலகைக் காப்­பாற்ற முடியும் எனப் போதிக்­கின்ற மேற்­கு­லகம், அணு­வா­யுத யுத்தம் ஒன்று வெடிக்­கு­மானால் தனது சொந்த நாட்டு மக்­களைக் கூடக் காப்­பாற்­றி­விட முடி­யாது என்ற உண்­மையை வெளியே சொல்­லாமல் மறைத்து வரு­கின்­றது.

மிகச் சரி­யாகச் சொல்­வ­தானால் அத்­த­கைய ஒரு சிந்­தனை மக்கள் மனதில் எழுந்­து­வி­டாமல் இருப்­ப­தற்கு ஏது­வான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றது. அதே­வேளை ஒரு அணு­வா­யுத யுத்தம் ஒன்றை நோக்­கிய தயார்­ப­டுத்­தலில் ஈடு­பட்டும் வரு­கின்­றது.

இதன் ஒரு அங்­க­மாக பிரித்­தா­னி­யாவில் அடுத்த ஆண்டில் அணு­வா­யு­தங்­களைச் சேமிக்க அமெ­ரிக்க முடிவு செய்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யாகி உள்­ளன.

தலை­நகர் லண்­டனில் இருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள லேக்­கன்­ஹீத்தில் உள்ள விமானப் படைத் தளத்தில் இதற்­கான முன்­னா­யத்த வேலைகள் நடப்­ப­தாகத் தெரிய வரு­கி­றது.

இந்தத் திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக 50 மில்­லியன் டொலர் நிதிக் கோரிக்கை அமெ­ரிக்க விமானப் படை­யி­னரால் கடந்த மார்ச் மாதத்தில் அமெ­ரிக்க காங்­கி­ர­ஸிடம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

லேக்­கன்ஹீத் விமானப் படைத் தளம் 1948ஆம் ஆண்டு முதல் அமெ­ரிக்கப் படை­யி­னரின் பாவ­னை­யி­லேயே உள்­ளது.

1954இல் இங்கு முதன்­மு­த­லாக அணு­குண்­டுகள் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டன. எனினும், பொது­மக்­களின் எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் கார­ண­மா­கவும், சோவியத் ஒன்­றி­யத்தின் உடைவின் பின்னான அர­சியல் சூழல் கார­ண­மா­கவும் 2008ஆம் ஆண்டு அங்கு களஞ்­சியப் படுத்தப்பட்டிருந்த அணு­வா­யு­தங்­களை அமெ­ரிக்கா விலக்கிக் கொண்­டது.

அன்­றைய கால­கட்­டத்தில் இந்தப் படைத்­த­ளத்தில் 110 அணு­குண்­டுகள் இருந்­த­தாகத் தெரி­கின்­றது. 15 வரு­டங்­களின் பின்னர் அங்கே மீளவும் அணு­வா­யு­தங்­களைக் கொண்­டு­வர அமெ­ரிக்கா உத்­தே­சித்­துள்­ளது.

இந்த விமானப் படைத் தளத்தில் ஏற்­க­னவே இரண்டு பாரிய விபத்­துகள் நடந்­துள்­ளன. இரண்டு தட­வை­க­ளிலும் பாரிய அனர்த்­தங்கள் எதுவும் நிகழ்ந்­து­வி­டாத போதிலும் அவை மிக மோச­மான விபத்­துகள் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை.

1956ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத்தின் போது பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த பி-47 ரக விமானம் ஒன்று அணு­வா­யு­தங்கள் சேமிக்­கப்­பட்­டி­ருக்கும் கிடங்கின் மீது விழுந்து வெடித்­தது.

இதன்­போது விமா­னிகள் நால்­வரும் மர­ணத்தைத் தழு­வினர். இந்த விபத்தின் போது அணு­குண்­டுகள் எதுவும் வெடிக்­காமல் போனமை மிகப்­பெரும் அதி­சயம் எனக் கரு­தப்­பட்­டது.

விபத்து நாளில் அணு­குண்­டுகள் வெடித்­தி­ருக்­கு­மானால் கிழக்கு இங்­கி­லாந்து முழு­வதும் பாலை­வ­ன­மாக மாறி இருந்­தி­ருக்கும்.

5 ஆண்­டு­களின் பின்னர் அடுத்த விபத்து நிகழ்ந்­தது. அணு­குண்டைக் காவிச்­சென்ற விமானம் ஒன்று விமா­னியின் தவறு கார­ண­மாகத் தீப்­பி­டித்துக் கொண்­டது.

என்­றாலும் மிகுந்த சிர­மத்தின் பின்னர் தீ கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்டு குண்டு வெடிக்­காமல் காப்­பாற்­றப்­பட்­டது.

இந்த விபத்­துகள் தொடர்­பான செய்­திகள் பிரித்­தா­னிய அர­சாங்­கத்­தி­னாலும் அமெ­ரிக்க அர­சாங்­கத்­தி­னாலும் வெளியே தெரி­யாமல் பல வரு­டங்­க­ளாக மறைக்­கப்­பட்­டி­ருந்­தன. முறையே 1979 மற்றும் 2003 ஆகிய ஆண்­டு­க­ளி­லேயே இந்தச் செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டன.

தற்­போ­தைய நிலையில் பிரித்­தா­னி­யா­வுக்கு மீண்டும் அணு­குண்­டு­களை நகர்த்தும் அமெ­ரிக்­காவின் முயற்சி கார­ண­மாக பிரித்­தா­னிய மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி ஐரோப்­பியப் பிராந்தியம் முழு­வ­தற்­குமே அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே ஐரோப்­பிய கண்­டத்தில் உள்ள ஐந்து நாடு­களில் அமெ­ரிக்கா அணு­குண்­டு­களைச் சேமித்து வைத்­துள்­ளது. ஜேர்­மனி, பெல்­ஜியம், நெதர்­லாந்து, இத்­தாலி மற்றும் துருக்கி ஆகிய நாடு­களில் உள்ள ஆறு விமானப் படைத் தளங்­களில் 100 அணு­குண்­டுகள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு அணு­வா­யு­தங்­களை வைத்­தி­ருப்­பது தொடர்பில் உள்­ளூ­ரிலும், வெளி­நா­டு­க­ளிலும் பலத்த எதிர்ப்­புகள் தெரி­விக்­கப்­பட்ட போதிலும் அது தொடர்பில் அமெ­ரிக்கா கண்டு கொள்­ள­வில்லை.

ஜேர்­மனி, பெல்­ஜியம், நெதர்­லாந்து ஆகிய நாடு­களின் அர­சாங்­கங்கள் கூட அமெ­ரிக்­காவின் அணு­வா­யு­தங்கள் தங்கள் நாட்டில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளன. அவற்றை அகற்றிக் கொள்­ளு­மாறு கோரிக்கை வைத்­துள்­ளன. இருந்தும் இது­வரை எதுவும் நடக்­க­வில்லை.

உலகின் பல நாடு­களில் மின்­சாரம் உள்­ளிட்ட தேவை­க­ளுக்­காக அணு­சக்தி பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றமை தெரிந்­ததே.

இத்­த­கைய சக்தித் தேவை­க­ளுக்­காக அணு­சக்­தியைப் பயன்­ப­டுத்­து­வ­தற்குக் கூட உலகம் முழு­வதும் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது.

பல்­வேறு தன்­னார்வத் தொண்டு அமைப்­புகள் இதற்­கெ­தி­ராகத் தொடர்ச்­சி­யாகப் போராடி வரு­கின்­றன. ஆனால், பிரித்­தா­னி­யாவில் அமெ­ரிக்கா மீளவும் கொண்­டு ­வ­ர­வுள்ள அணு­குண்­டுகள் தொடர்பில் இது­வரை பாரிய சல­ச­லப்­புகள் எத­னையும் காண­வில்லை.

இதே­வேளை, அமெ­ரிக்­காவின் இந்த நட­வ­டிக்கை தொடர்பில் ரஷ்யா கடு­மை­யான கண்­ட­னங்­களை வெளி­யிட்­டுள்­ளது.

அமெ­ரிக்கா இத்­த­கைய நகர்­வு­களை மேற்­கொள்­ளு­மானால் பதி­லுக்கு ரஷ்­யாவைப் பாது­காக்கும் நோக்கில் தமது நாடும் அணு­வா­யு­தங்­களை நட்பு நாடு­க­ளுக்கு நகர்த்த வேண்­டிய சூழல் உரு­வாகும் என்ற எச்­ச­ரிக்கை ரஷ்­யா­விடம் இருந்து வெளி­யாகி உள்­ளது.

ஏற்­க­னவே, ரஷ்ய அணு­வா­யு­தங்­களை பொலா­ரஸ்­ஸுக்கு அனுப்பும் முடிவை ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புட்டின் எடுத்­துள்ளார் என்­பது தெரிந்­ததே.

இந்த வேளையில், அமெ­ரிக்கா அணு­வா­யுத யுத்தம் ஒன்­றுக்கு உண்­மை­யி­லேயே தயா­ரா­கி­றதா என்ற கேள்வி எழு­கின்­றது.

அவ்­வா­றான ஒரு யுத்­தத்தை அமெ­ரிக்கா எதிர்­பார்த்து இருக்­கு­மானால், அதிலும் ரஷ்யா போன்ற ஒரு அணுவாயுத வல்லரசு ஒன்றுடன் மோதத் தயாராகுமானால் அதனால் உலகமே அழிந்துபோகும் வாய்ப்பு உள்ளது என்பதை அமெரிக்கா அறியாதா? அல்லது மனித குலமே அழிந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துவிட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன.

ஏற்கெனவே, 1945ஆம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்களில் அணுகுண்டு வீசித் தாக்குதல் நடத்திய வரலாறு அமெரிக்காவுக்கு உள்ளது.

உலக வரலாற்றில் இன்றுவரை அணுவாயுதத் தாக்குதல்களை மேற்கொண்ட ஒரேயொரு நாடாகவும் அமெரிக்காவே உள்ளது.

தனது கடந்தகாலத் தவறுக்காக ஏலவே மன்னிப்புக் கோரியுள்ள அமெரிக்கா மீண்டும் அதே தவறைச் செய்வதற்கு முனைப்புக் காட்டுவதை எவ்வாறு புரிந்து கொள்வது?

-சுவிசிலிருந்து சண் தவராசா-

Share.
Leave A Reply

Exit mobile version