“உக்ரைன், கார்கிவின் கிழக்குப் பகுதியில் உள்ள மளிகைக் கடை மற்றும் ஓட்டல் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 6 வயது சிறுவன் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, \”சாதாரண மளிகைக் கடையை ராக்கெட் மூலம் தாக்கிய கொடூரமான ரஷியாவின் குற்றச்செயல் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்\” என்று சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் உடல் அருகே பெண் ஒருவர் மண்டியிட்டுக் கிடப்பதைப் போன்ற ஒரு படத்தை ஜெலென்ஸ்கி வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தில் அந்த பெண்ணை சுற்றி சடலங்கள் சிதறிக்கிடப்பதை காணமுடிகிறது. மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கார்கிவ் பிராந்தியத்தின் தலைவர் ஒலெக் சினெகுபோவ் கூறுகையில், \”க்ரோசா கிராமத்தில் இன்று மதியம் 1:15 மணியளவில் ஒரு ஓட்டல் மற்றும் கடையில் ராக்கெட் தாக்கியது.
இந்த கிராமம் ஒரு முன்னணி நகரமான குபியன்ஸ்கிற்கு மேற்கே 30 கிலோமீட்டர் (சுமார் 20 மைல்) தொலைவில் உள்ளது.
மேலும், இங்கு, போருக்கு முந்தைய மக்கள் தொகை சுமார் 500 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.”,