சென்னை : சென்னை திருமுல்லைவாயலில் இளைஞர் ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் அண்ணியை அழைத்துக் கொண்டு ரயிலில் ஏறி எஸ்கேப் ஆகி உள்ளார்.

இது குறித்து அவரது மனைவி ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபிஸில் புகார் அளித்துள்ளார். சென்னையின் புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், உப்பரபாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார்.

இவருக்கும் கொல்கத்தாவில் வசிக்கும் நந்தினி என்பவருக்கும் 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

மணிகண்டன் – நந்தினி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் அந்த பகுதியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள்,

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, வேலைக்கு போய்விட்டு நந்தினி வீடு திரும்பி உள்ளார். அப்போது தனது 2 வயது குழந்தை காணாமல் போயிருந்தது.

மூத்த மகளிடம் கேட்ட பொழுது அப்பா கடைக்கு கூட்டிச் சென்றுள்ளதாக கூறியிருக்கிறார். சரி, கடைக்கு தான் சென்று உள்ளார்கள் திரும்பி வந்து விடுவார்கள் என நந்தினி நினைத்திருக்கிறார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மணிகண்டன் வரவில்லை.

கணவன் மாயம்: நீண்ட நேரம் ஆகியும் கணவனும் குழந்தையும் திரும்ப வராததால் செல்போனில் அழைத்து பார்த்துள்ளார் நந்தினி.

ஆனால் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அக்கம் பக்கம் தேடியும் காணவில்லை.

பதற்றத்தில் என்ன செய்வது என தெரியாமல் மணியின் சொந்த ஊரான வடலூரில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு நந்தினி போன் போட்டிருக்கிறார்.

அப்போது மணிகண்டனின் அண்ணன் மனைவியான விஜியும் காணாமல் போயிருந்தது நந்தினிக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது.

என்னடா இது, ஒரே நேரத்தில் அண்ணி மற்றும் கொழுந்தனை என இருவரையும் காணவில்லையே என்று யோசித்தவர்களுக்கு நடந்த சம்பவம் தூக்கிவாரிப்போட்து.

அண்ணியுடன் கள்ளக்காதல்: அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வந்த மணிகண்டன், அண்ணனின் மனைவி விஜியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் எதற்கு மறைந்து மறைந்து வாழ வேண்டும்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர்.

ரயிலில் ஓட்டம்: மணிகண்டன் தனது மனைவி நந்தினியையும், விஜி தனது கணவனையும் விட்டு பிரிந்து ஊரை விட்டு எஸ்கேப் ஆக திட்டமிட்டுள்ளனர்..

மத்திய பிரதேசத்திற்கு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். இதனிடையே மணி தனது இரண்டாவது குழந்தை மீது அதிக பாசம் வைத்திருந்தால், போகும் போது குழந்தையையும் தூக்கிக்கொண்டு விஜியுடன் ரயில் ஏறி ஓடிப்போய்விட்டாராம்.

 நந்தினி புகார்: இதை அறிந்த நந்தினி, கணவனையும், குழந்தையையும் மீட்டு தரக்கோரி ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

5 நாட்களாகியும் இதுவரை குழந்தை கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த நந்தினி, மீண்டும் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளாராம்

ஆனால் போலீசார் அலட்சியமாக பார்த்துவிட்டு குழந்தையை கண்டுபிடிப்பதில் காலதாமதம் செய்வதாக நந்தினி குற்றச்சாட்டி உள்ளார்.

அண்ணியுடன் ரயில் ஏறி கொளுந்தன் ஓட்டம் பிடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version