இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மக்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணை கைதிகளாக பிடித்து சென்று கொன்று வருகிறது.

இந்நிலையில் தான் இஸ்ரேல் ராணுவம் ஸ்கெட்ச் போட்டு ஹமாஸ் அமைப்பின் 60க்கும் அதிகமான தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி 250 பணயக்கைதிகளை பத்திரமாக மீட்ட த்ரில் வீடியோ வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது. கடந்த 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது 7 ஆயிரம் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தினர்.

மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்குள்ள மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

இதுமட்டுமின்றி இஸ்ரேல் மற்றும் அங்கு வந்திருந்த வெளிநாட்டு மக்களை அவர்கள் பணயக்கைதிகளாக(பிணைக்கைதிகள்) பிடித்து சென்றனர்.

இது இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் காசா மீது போரை தொடங்கியது. இருதரப்புக்கும் இடையே இன்று 7 வது நாளாக போர் நடந்து வருகிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் தற்போது வரை 2,500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதுதவிர இஸ்ரேல் நாட்டு மக்களை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.

இவர்களை இஸ்ரேல் படைகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்போது வரை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் மட்டுமே நடத்தி வந்தது.

இப்போது தரைவைழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இதனால் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 10 லட்சம் பேரை உடனடியாக தெற்கு பகுதிக்கு இடம்பெயர வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதற்காக 24 மணிநேரம் டைம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காசாவில் மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தான் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை மீட்க அந்நாட்டு ராணுவம் மீட்க முயற்சித்து வருகிறது.

ஐடிஎப் எனும் இஸ்ரேலிய ராணுவத்தினர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து பணயக்கைதிகளாக உள்ள தங்கள் நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா எல்லையில் சுபா மிலிட்டரி கேம்ப் பகுதியில் உள்ள கட்டடத்தில் 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து ஹமாஸ் அமைப்பு மிரட்டி வருவது தெரியவந்தது.

இதையடுத்து பணயக்கைதிகளாக உள்ள 250 பேரையும் பத்திரமாக மீட்க இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டடது. அதன்படி இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டு பணயக்கைதிகளை மீட்க முயன்றனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவ வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர்.

நீண்டநேரம் இந்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் வகையில் ஹமாஸ் தீவிரவாதிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இறுதியாக 60 ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்று பணயக்கைதிகளாக இருந்த 250 பேரை பத்திரமாக மீட்டனர்.

இதற்கிடையே ஹமாஸ் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு ராணுவ வீரர்கள் எப்படி பணயக்கைதிகளை மீட்டனர் என்பது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛60க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஹமாசின் தெற்கு கடற்படை பிரிவின் துணை தளபதியான முகம்மது அபு அலி உள்பட 26 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version