பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மனைவியே கணவரைக் காசுக்கு விற்ற பகீர் சம்பவம் நடந்துள்ளது.

இதைப் பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு போய்விட்டார்கள். இப்போது நம்மைச் சுற்றிலும் பல வினோதமான சம்பவங்கள் நடக்கிறது.

இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கா என நாம் யோசிக்கும் சம்பவங்கள் கூட இப்போது நடக்கிறது.

அப்படியொரு வினோதமான யாருமே கேள்விப்படாத சம்பவம் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்துள்ளது.

இதற்கு நெட்டிசன்களும் இரு வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்

இரட்டை ரோஜா: கடந்த 1996இல் வெளியான இரட்டை ரோஜா திரைப்படம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

அதில் ஊர்வசி பணத்திற்காகத் தனது கணவர் ராம்கியை குஷ்புவிடம் விற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது கர்நாடக மாநிலம் மாண்டியாவில் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவர் கள்ள உறவில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.

அதே கிராமத்தில் வசிக்கும் மற்றொரு பெண்ணுடன் இவர் கள்ள உறவில் இருந்துள்ளார். அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்த போது அவர்களை கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்.

உடனடியாக அந்த இரு பெண்களுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுவிட்டது.

ஷாக் ஷாக் மேல் ஷாக்: இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார்.

அப்போது கள்ள உறவில் இருந்த அந்த பெண், “உன் புருஷன் என்னிடம் ரூ.5 லட்சம் கடனாக வாங்கி இருக்கிறார். அந்த 5 லட்ச ரூபாயை கொடுத்துட்டு உன் கணவரை கூட்டிவிட்டு போ.. இல்லைனா இப்படிதான் இருப்போம்” என கூறியுள்ளார்.

அதற்கு அந்த மனைவி சொன்ன பதில் தான் அதிர்ச்சியின் உச்சமாக இருந்துள்ளது.

அதாவது அந்த மனைவி, “அப்படியொரு புருஷனே எனக்குத் தேவையில்லை.

நீ இன்னொரு 5 லட்ச ரூபாய் எனக்கு கொடு.. என் புருஷனை நீயே வைச்சுக்கோ.. எனக்குத் தேவையே இல்லை” என்று கூறி அதிர வைத்துள்ளார்.

இதற்குக் கள்ள உறவில் இருந்து அந்த பெண்ணும் சம்மதித்துள்ளார். ஒரு மாசத்தில் ஐந்து லட்சம் கொடுத்து தனது காதலனை வாங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

அதை அந்த மனைவியும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வாயடைத்துப் போன நெட்டிசன்கள்: பஞ்சாயத்தில் தான் இந்த அத்தனை களேபரங்களும் நடந்துள்ளது.

இதையெல்லாம் அங்குப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

பிரச்சினை முடிந்தது என மகிழ்வதா அல்லது இப்படி பிரச்சினை முடிந்தது என சோகமடைவதா என்று தெரியாமல் அங்கிருந்து புலம்பியபடி நகர்ந்தனர்.

மனைவி தனது சொந்த கணவரையே விற்ற இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பான செய்திகளும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்களும் கூட இதற்கு இருவேறு விதமான கருத்துகளையே கூறி வருகின்றனர்.

ஒரு தரப்பினர் கலி காலம்.. என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ.. அதெல்லாம் நடக்கிறதே எனப் புலம்புகிறார்கள்.

மற்றொரு தரப்பினர் அந்த பெண் செய்ததில் தவறு இல்லை. கணவரே மனைவியை ஏமாற்றிய போது அந்த பெண் இப்படிச் செய்ததில் தவறில்லை என்றும் கூறி வருகின்றனர். எங்கள்

 

Share.
Leave A Reply

Exit mobile version