நேற்று ரவீனா தனது சிரிப்பால் வீட்டில் இருக்கும் அனைவரையும் சிரிக்கவைத்தார். இது உண்மையிலேயே ஸ்டெரஸ் ரிலீஃப்பாகவே அனைவருக்கும் இருந்தது.

பிக்பாஸில் நேற்று போட்டியாளர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் டாஸ்க் நடைபெற்றது. கிட்டதட்ட மல்யுத்த போட்டிபோலதான் இதுவும் இருந்தது.

விக்ரம் ரவீனாவின் கால்களைப் பிடித்துக்கொண்டு அவரை நகரவிடாமல் பார்த்துக்கொண்டார்.

இன்னொருபக்கம் விஜய் விஷ்ணுவை நகரவிடாமல் பார்த்துக்கொண்டார். நிக்ஸன் மற்றும் மணி ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்தவர்களின் கைகளிலிருந்து ஆக்ஸிஜன் பாட்டில்களை எடுத்துச்செல்வதில் கவனத்தை செலுத்தினர்.

இதில் ஆக்ஸிஜன் பாட்டிலை தூக்கி வரும்பொழுது நிக்ஸன் மூடியிருக்கும் கண்ணாடி கதவில் மோதிவிட… அடுத்த நொடியே கண்ணாடி துண்டுதுண்டாக நொறுங்கி விழுந்தது. இதில் பிரதீப்பும் நிக்ஸனும் சிறுகாயம் அடைந்தனர்.

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 19-10-2023 Vijay Tv Show- Day 18
………………………………………………………………………………………………………………………………………………

BIGG BOSS DAY 17 | ஐஷூ கொடுத்த அட்வைஸாலதான் அக்‌ஷயாவுக்கு சாபக்கல் கிடைத்ததா?

பிக்பாஸ்ஸில் 17ம் நாளான நேற்று, ‘கடந்து வந்த பாதை’ பற்றிய டாஸ்க் நடந்தது. போட்டியாளார்கள் அனைவரும் வாழ்க்கையில் தாங்கள் கடந்து வந்த காலத்தை பற்றி தனித்தனியாக பேசினார்கள். இதில் அக்‌ஷயா வெற்றிபெற்று கோல்ட் ஸ்டார் வாங்கினார்.

அக்‌ஷயாவும், வினுஷாவும்தான் போரிங் கண்டஸ்டண்ட் என்றும், அதனால் இவர்கள் இருவருக்கும் சிறை தண்டனை வழங்குவதாகவும் பிக்பாஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் இருவரையும் ஒருவாரம் மன்னித்து விட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்குள் அக்‌ஷயா அனைவரின் கவனத்தையும் பெரும் வகையில் பாட்டு பாடி கதை சொல்லி விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, உச்சகட்டமாக நேற்றைய டாஸ்க்கில் கோல்ட் ஸ்டார் வென்று பிக்பாஸையே ஆச்சர்யப்பட வைத்துவிட்டார்.

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 18-10-2023 Vijay Tv Show- Day 17

 

Share.
Leave A Reply

Exit mobile version