பெங்களூர்: பெங்களூரில் காதலனுடன் ஓடிப்போனதால் 17 வயது மகளை துடிதுடிக்க தந்தையை வெட்டி ஆணவக்கொலை செய்த சம்பவம் நடுங்க வைத்துள்ளது.

மைசூர் மாவட்டம் எச்டி கோட்டையை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி சாரதா. இந்த தம்பதிக்கு 17 வயதில் மகள் இருந்தார்.

இந்நிலையில் தான் 17 வயது மகள் ஒருவரை காதலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கணேஷ் மற்றும் சாரதா கண்டித்துள்ளனர். அதோடு 17 வயது சிறுமியை பெங்களூர் அருகே நாகநாதபுராவில் உள்ள மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தான் கடந்த சில நாட்களுக்கு திடீரென்று சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து அவர்கள் ஆங்காங்கே தேடிப்பார்த்தனர்.

ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.

இந்த விசாரணையின்போது தான் அந்த 17 வயது சிறுமி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரும் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்து சிறுமியை மீட்டனர்.

அதன்பிறகு போலீசார் சிறுமியை அவரது மாமா வீட்டுக்கே அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தான் நேற்று இரவு எச்டி கோட்டையில் இருந்து நாகநாதபுரத்துக்கு சிறுமியின் தந்தை கணேஷ் வந்தார்.

அப்போது வீட்டில் இருந்த மனைவி சாரதா மற்றும் மகள் ஆகியோருடன் சண்ட ஏற்பட்டது. இந்த வேளையில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கணேஷ் அரிவாளை எடுத்து பெற்ற மகள் என்று கூட பாராமல் 17 வயது சிறுமியை சரமாரியாக வெட்டினார்.

இதை பார்த்து தடுக்க போன சாரதா உள்பட 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி இறந்திருப்பது தெரியவந்தது. சாரதா உள்பட 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணையில் மகள் காதலனுடன் ஓடிப்போனது தொடர்பான பிரச்சனையில் தான் அவரை தந்தை கணேஷ் வெட்டிக்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுபற்றி பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version