வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதான மகளும் அவரது தாயும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற ஆர்.எம். கோவித சாரமித் (6) தாயான லக்மாலி வீரசிங்க (37) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

இவர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்றதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிணற்றில் வீழ்ந்த சிறுமியைக் காப்பாற்ற தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுமியின் தந்தை கடற்படையில் பணிபுரிவதாகவும் அவர் தூர மாகாணத்தில் இருப்பதால் தாயும் மகளுமே மட்டுமே வீட்டில் நேரத்தைக் கழிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version