மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு 5,000 ரூபாவை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை செயற்படுத்தப்படும் எனவும் இக்காலகட்டத்தில், மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவரது சம்பளத்தில் 5,000 ரூபாவை கூடுதல் கொடுப்பனவாக வழங்கவுள்ளதாகவும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.

அதிகாரிகளை ஊக்குவிக்கவும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version